| ADDED : ஜூன் 19, 2024 12:18 AM
மயிலாப்பூர், மயிலாப்பூர், கணேசன்புரத்தைச் சேர்ந்த சின்னக்குழந்தை, 88, மகன், மருமகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் வசிக்கிறார்.நேற்று இரவு, 4 வயது குழந்தைக்கு சாப்பாடு ஊட்டியபோது, திடீரென வாந்தி எடுத்தது. மயக்கமும் அடைந்ததால், குழந்தையை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் சோதித்ததில், உணவு ஒவ்வாமை ஏற்பட்டது தெரிந்தது.இதையடுத்து, வீட்டில் பயன்படுத்தப்படும் கேனில் இருந்த சமையல் எண்ணெயை சோதித்தபோது, சிவப்பு நிறத்தில் இருந்துள்ளது. முழுதும் கீழே கொட்டி பார்த்தபோது, அதில் சிறிய அளவில் எலி ஒன்று இறந்து கிடந்ததும் தெரிந்தது.இதனால் பீதியடைந்த குடும்பத்தில் உள்ள எட்டு பேரும், உடனடியாக, ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்ந்தனர். இதில், நான்கு பேர் வீடு திரும்பினர்; மற்றவர்களுக்கு மேலும் சில பரிசோதனை செய்வதற்காக சிகிச்சையில் உள்ளனர்.கடந்த 20 நாட்களுக்கு முன், உறவினர் வீட்டு விசேஷத்திற்கு அனைவரும் சென்றுள்ளனர். பின் வீடு திரும்பி, 10 நாட்களாக எலி இறந்து கிடந்த எண்ணெய்யில் சமைத்து சாப்பிட்டதால், உடல் உபாதை ஏற்பட்டு உள்ளது.