உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 94 கிலோ குட்கா ஆவடியில் பறிமுதல்

94 கிலோ குட்கா ஆவடியில் பறிமுதல்

ஆவடி, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மோரை அருகே, நேற்று முன்தினம் இரவு, ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது, செங்குன்றம் நோக்கி, அவ்வழியாக வந்த 'ஹூண்டாய் கிரீட்டா' காரை மடக்கி சோதனை செய்தனர். இதில், தடை செய்யப்பட்ட 'ஹான்ஸ், கூலிப்' உள்ளிட்ட 94 கிலோ பொருட்கள் இருந்தது தெரிந்தது.குட்காவை பறிமுதல் செய்த போலீசார், அதை கடத்தி வந்த, ஆவடி, பொத்துார், வள்ளி வேலன் நகரைச் சேர்ந்த பிரேம் குமார், 28, என்பவரை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.தப்பியோடிய ஜெயபாலன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை