உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தண்ணீர் பக்கெட்டில் விழுந்து 1 வயது குழந்தை உயிரிழப்பு

தண்ணீர் பக்கெட்டில் விழுந்து 1 வயது குழந்தை உயிரிழப்பு

அரும்பாக்கம், அரும்பாக்கம், கம்யூனிட்டி ஹால் தெருவைச் சேர்ந்தவர் முஹமது தாரீக், 45; வீட்டிலிருந்து, 'ஆன்லைன்' வாயிலாக,'குரான்' வகுப்பு எடுத்து வருகிறார். இவரது மனைவி ஷாஜியா பர்வீன், 38. தம்பதிக்கு நான்கு குழந்தைகள்.நேற்று முன்தினம் மாலை முஹமது தாரீக், வீட்டில் உள்ள ஒரு அறையில் இருந்துள்ளார். அவரது மனைவி, வீட்டு வேலைகளை செய்துள்ளார். அவர்களது 1 வயதுடைய மகன் முஹமத் அத்னான் தாரீக், விளையாடிக் கொண்டே கழிப்பறைக்குச் சென்றுள்ளான்.அங்கு, தண்ணீர் நிரம்பியிருந்த பிளாஸ்டிக் பக்கெட்டில், தலைகுப்புறத் தவறி விழுந்து மயங்கியுள்ளான்.குழந்தையை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சோதித்தபோது, குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அரும்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ