உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காவு வாங்க காத்திருக்கும் கால்வாய்

காவு வாங்க காத்திருக்கும் கால்வாய்

மாதவரம், தணிகாசலம் நகரில் உள்ள மழைநீர் வடிகால் அகலப்படுத்தும் பணி நடக்கிறது. இந்த நிலையில், கொளத்துார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் கால்வாய் இணைப்பு முழுதும் முடிக்கப்படாமல் அப்படியே உள்ளது. கடந்த ஓராண்டாக இந்த நிலைமை தான்.இதனால், அப்பகுதி காவு வாங்க காத்திருக்கும் கால்வாயாக மாறியுள்ளது. மேலும், சுற்றுச்சுவரும் சிறிது சிறிதாக இடிந்து வருவதுடன், அப்பகுதி குப்பை கொட்டும் இடமாகவும் மாறி வருகிறது. மாநகராட்சியிடம் பகுதி மக்கள் புகார் அளித்த நிலையில், இணைப்பு பகுதியில் தடுப்பு அமைத்ததுடன் கடமை முடிந்தது என, மாநகராட்சி நிர்வாகம் துாங்கிவிட்டது.துரைசாமி, மாதவரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ