உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போலீசுக்கு தண்ணி காட்டி கஞ்சா விற்றவர் சிக்கினார்

போலீசுக்கு தண்ணி காட்டி கஞ்சா விற்றவர் சிக்கினார்

நீலாங்கரை, இ.சி.ஆரில் அக்கரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நீண்ட நேரம் சுற்றித்திரிந்த மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தனர். அதில், பாலவாக்கத்தை சேர்ந்த கோபிகிருஷ்ணன், 28, என்பவரின் பையை சோதனை செய்தபோது, 6 கிலோ கஞ்சா சிக்கியது. இந்த நேரத்தில், மற்ற இருவரும் தப்பி செல்ல முயன்றனர்.போலீசார் அவர்களை மடக்கி விசாரித்தபோது, விழுப்புரத்தைச் சேர்ந்த சையது காதர், 24, திருவண்ணாமலையைச் சேர்ந்த பாண்டியராஜன், 25, என தெரிந்தது. இருவர் வைத்திருந்த பைகளில், 6 கிலோ கஞ்சா இருந்தது.பிடிபட்டவர்களில் கோபிகிருஷ்ணன் என்பவர் மீது துரைப்பாக்கம் போலீசில் கொலை வழக்கு உள்ளது. கடந்த ஓராண்டாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல், போலீசாருக்கு 'தண்ணி' காட்டி வந்தார். அதேநேரம், கூவத்துாரில் தலைமறைவாக இருந்து கஞ்சா விற்று வந்தது தெரிந்தது.மூன்று பேரையும் கைது செய்த போலீசார், 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ