உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தலை தொங்கிய மூன்றாவது கண்

தலை தொங்கிய மூன்றாவது கண்

புழல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட லட்சுமிபுரம் வில்லிவாக்கம் சாலை - கடப்பா சாலை சந்திப்பு, போக்குவரத்துமிக்க பகுதியாக மும்முனை சந்திப்பாக உள்ளது. இங்கிருந்து கொளத்துார், மாதவரம், ரெட்டேரி, கொரட்டூர் ஆகிய பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.இங்கு மும்முனைகளையும் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா, தற்போது செயல்பாடில்லாமல் வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே உள்ளது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன், இப்பகுதியில் உள்ள பேன்ஸி ஸ்டோரில் நடந்த திருட்டு சம்பவம் இந்த கண்காணிப்பு கேமரா வாயிலாகவே கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. துாங்கி கிடக்கும் கண்காணிப்பு கேமராவை மீண்டும் செயல்பட வைக்க வேண்டும்.- வியாபாரிகள், புழல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை