உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சத்தமாக பாட்டு கேட்டதை தட்டி கேட்டவர் கொலை

சத்தமாக பாட்டு கேட்டதை தட்டி கேட்டவர் கொலை

திருவல்லிக்கேணி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தம்பிராஜன், 60. இவர், அண்ணா சாலையில் உள்ள தாராப்பூர் டவரில் காவலாளியாக பணி புரிந்தார்.இவர் திருவல்லிக்கேணியில் உள்ள 'ஆசியா' லாட்ஜில் மாத வாடகைக்கு அறை எண்: 604ல் தங்கியிருந்தார். இதே லாட்ஜில், விருது நகரைச் சேர்ந்த அய்யனார், 60, என்பவரும் தங்கியிருந்தார்.ஆட்டோ ஓட்டுனரான இவர், கடந்த 22ம் தேதி மாலை மது போதையில் சத்தமாக பாட்டு ஒலிக்க வைத்து கேட்டுக் கொண்டிருந்தார்.இதை தம்பிராஜன் தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அய்யனார், கட்டையால் தம்பிராஜனை தாக்கியுள்ளார். இதில் அவரது விலா எலும்பு உடைந்து, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு தம்பிராஜன் உயிரிழந்தார். இதுகுறித்து விசாரித்த திருவல்லிக்கேணி போலீசார், அய்யனாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ