உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஓடும் பஸ்சில் மொபைல்போன் திருடியவர் சிக்கினார்

ஓடும் பஸ்சில் மொபைல்போன் திருடியவர் சிக்கினார்

சேத்துப்பட்டு, ஓடும் பேருந்தில், பயணி ஒருவரின் மொபைல் போனை திருட முயன்ற திருடனை, சக பயணியர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.அயனாவரம், சோலையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வின்ஸ்லெட், 26. இவர் மயிலாப்பூரில் உள்ள தனியார் புத்தக பதிப்பக நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார்.நேற்று காலை இவர், வழக்கம் போல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் இருந்து, 'தடம் எண்: 29சி' மாநகர பேருந்தில் மயிலாப்பூருக்கு சென்றார். பேருந்து சேத்துப்பட்டு சிக்னல் அருகே சென்ற போது, அருகில் பயணித்த ஒருவர் இவரது பையில் இருந்த மொபைல் போனை திருட முயன்றார்.இதை பார்த்த சக பயணி ஒருவர், திருடனை கையும் களவுமாக பிடித்து, சிக்னலில் பணியிலிருந்த போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைத்தார். சேத்துப்பட்டு போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில், புளியந்தோப்பு, பெரியார் நகரைச் சேர்ந்த கந்தசாமி, 37, என்பதும், இவர் மீது திருட்டு வழக்கு இருப்பதும் தெரிந்தது. சேத்துப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்