உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கருணீக்கர் சாலையில் சிக்கிய லாரி சரிவர மூடாத பள்ளத்தால் விபத்து

கருணீக்கர் சாலையில் சிக்கிய லாரி சரிவர மூடாத பள்ளத்தால் விபத்து

ஆதம்பாக்கம், சென்னை மாநகராட்சியின், ஆலந்துார் மண்டலம் ஆதம்பாக்கத்தில் பிரதான சாலைகளில் ஒன்று கருணீக்கர் சாலை. ஆலந்துாரில் இருந்து ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை, புழுதிவாக்கம், உள்ளகரம் செல்வோர், இந்த சாலையை அதிகம் பயன்படுத்துவர்.குறிப்பாக, இருசக்கர வாகனங்களும், இலகுரக வாகனங்களும் அதிகம் பயன்படுத்துகின்றன. 30 அடி அகலம் கொண்ட இச்சாலையின் இருபுறமும், பல்வேறு வர்த்தக கடைகள் வரத்தால் பஜார் வீதியாக மாறியது. அதனுடன் சாலையும் ஆக்கிரமிக்கப்பட்டது.தற்போது, எதிரெதிரே வாகனத்தில் வந்து செல்வதே மிகவும் கடினமான அளவிற்கு சாலை சுருங்கிவிட்டது. இந்நிலையில், கருணீக்கர் சாலையில் பாதாள சாக்கடையின் பிரதான குழாய் சில நாட்களுக்கு முன் பழுதடைந்தது. குடிநீர் வாரியத்தினர் சரி செய்த நிலையில், தோண்டிய பள்ளத்தை சரியாக மூடாததால் மணல் மேடாக காட்சியளித்தது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை சாரல் மழையால், இலகுரக வாகனங்களுக்கே மண் உள்வாங்கியது. இந்நிலையில், நேற்று டாரஸ் லாரி ஒன்று பள்ளத்தில் சிக்கியது. இதனால், அச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.கடும் போராட்டத்திற்கு பின் அந்த லாரி மீட்கப்பட்டது. எனவே, போக்குவரத்து நிறைந்த இச்சாலையை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. மேலும், இச்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ