உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அ.தி.மு.க., போராட்டம்

அ.தி.மு.க., போராட்டம்

கொளத்துார், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிச்சாமியை அவதுாறாக பேசியதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை கண்டித்து, கொளத்துார் அருகே செந்தில் நகர் சந்திப்பில், நேற்று மதியம் அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்மா பேரவை துணை தலைவர் கணேசன் தலைமையிலான 10க்கும் மேற்பட்டோர் திடீரென கூடி, அண்ணாமலையின் உருவ பொம்மையை பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.தகவல் அறிந்து வந்த போலீசார், தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். அ.தி.மு.க.,வினரின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி