உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் டாக்காவுக்கு நேரடி விமானம்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் டாக்காவுக்கு நேரடி விமானம்

சென்னை,சென்னையில் இருந்து வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், புதிதாக நேரடி விமான சேவையை வரும் செப்., 3ம் தேதியில் இருந்து துவங்குகிறது.சென்னையில் இருந்து ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தவிர்த்து, மற்ற ஆறு நாட்களில் விமானம் இயக்கப்பட உள்ளதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.சென்னையில் இரவு 7:00 மணிக்கு புறப்படும் விமானம், டாக்காவுக்கு இரவு 10:10க்கு சென்றடையும். டாக்காவில் இருந்து மதியம் 2:30 புறப்பட்டு, மாலை 4:50க்கு சென்னை வந்தடையும். சென்னை - டாக்கா செல்ல 5,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்தால் 4,796 கட்டணம் பெறப்படும். டாக்காவில் இருந்து சென்னைக்கு 7,400 ரூபாய் கட்டணமும், ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்தால் 7,223 ரூபாய் என தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ