உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிண்டி பூங்கா மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு

கிண்டி பூங்கா மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு

சென்னை, சென்னை கிண்டி சிறுவர் பூங்கா மேம்பாட்டுக்கு நடப்பு நிதியாண்டில் ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட வனத்துறை கொள்கை விளக்க குறிப்பு:சென்னையில் கிண்டி சிறுவர் பூங்கா மேம்பாட்டு பணி, 20 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும் என, 2023 - 24ல் அறிவிக்கப்பட்டது. இதில், 15 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகளை மேற்கொள்ள, நடப்பு நிதி ஆண்டில், ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்படும். வண்டலுார் உயிரியல் பூங்காவில், '3 டி' மற்றும் '7 டி' தியேட்டர் அமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, மக்கள் பார்வைக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ