உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கழிவு நீர் பிரச்னைக்கு மாற்று ஏற்பாடு

கழிவு நீர் பிரச்னைக்கு மாற்று ஏற்பாடு

சென்னை:மாதவரம் மண்டலத்தில், மெட்ரோ ரயில் பணியால், எம்.எம்.பி.டி., சேவை சாலையில், பிரதான கழிவுநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணி நடக்கிறது. இதனால், நாளை காலை முதல் 20ம் தேதி காலை வரை, மாதவரம், திரு.வி.க., நகர், அம்பத்துார் மற்றும் அண்ணா நகர் மண்டலங்களில் உள்ள கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது.இதன் காரணமாக, சாலையில் உள்ள இயந்திர நுழைவாயில் வழியாக கழிவுநீர் வெளியேற வாய்ப்புள்ளது. அதுபோன்று வெளியேறினால், கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் கொண்டு கழிவுகள் வெளியேற்றப்படும்.இதற்கு, மாதவரம் 81449 30903; திரு.வி.க., நகர் - 81449 30906; அம்பத்துார் 81449 30907; அண்ணா நகர் 81449 30908 ஆகிய மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை