உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின் பெட்டியா... சவப்பெட்டியா?

மின் பெட்டியா... சவப்பெட்டியா?

மாதவரம் மண்டலத்தின் 32வது வார்டில் உள்ள சரஸ்வதி நகர் இரண்டாவது தெரு, பாரதி தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் மின்பகிர்மானப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் பல, சரிந்து சாலையில் வீழ்ந்து கிடக்கிறது. சில மணி நேரம் மழை பெய்தாலும், சாலையில் தண்ணீர் தேங்கும் சூழலில் பெரும் அசம்பாவிதங்களுக்கு துவக்கப்புள்ளியாக இந்த மின் பெட்டிகள் மாறும்.சமீபத்தில், புது தார்ச்சாலை அமைக்கும் பணியின்போது, வாகனம் மோதி மின்பெட்டி சரிந்தது. சரிசெய்யக் கூறி பலமுறை புகார் அளித்தும், யாரும் கண்டுகொள்ளவில்லை. மழை பெய்தாலோ, சாலையில் மழைநீர் தேங்கினாலோ உயிர்பலி அபாயம் நிச்சயம். அசம்பாவிதங்கள் நிகழும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பிரேம், மாதவரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை