மேலும் செய்திகள்
செய்திகள் சில வரிகளில்
23 hour(s) ago | 1
சென்னை, பிரதான சாலைகள் சந்திப்பில், தினசரி 'பீக் ஹவர்ஸ்' வேளையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.எழும்பூர், பேந்தியன் சாலை, ருக்மணி லட்சுமிபதி சாலை, காவலர் சாலை, ஆதித்தனார் சாலை என, நான்கு முனை சந்திப்பில், இதுவரை சிக்னல்கள் அமைக்கப்படவில்லை. இதனால், தினசரி பீக் ஹவர்ஸ் வேளையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, வாகன ஓட்டிகள் உரிய நேரத்திற்கு குறித்த இடத்திற்குச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.அதுமட்டுமின்றி, பேந்தியன் சாலையில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வரும் அவசர சேவை வாகனங்களும், நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன.இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும், போக்குவரத்து போலீசார் எடுக்காமல் இருப்பது, வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.அண்ணா சாலையிலிருந்து எழும்பூர் மருத்துவமனை, ரயில் நிலையம் உள்ளிட்டவற்றிற்கு செல்வோர், இவ்வழியாக தான் செல்ல வேண்டி உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நீண்ட நாள் பிரச்னையாக உள்ள போக்குவரத்து நெரிசலை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
23 hour(s) ago | 1