உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பேக்கரி பொருள் தயாரிப்பு பயிற்சி

பேக்கரி பொருள் தயாரிப்பு பயிற்சி

சென்னை:கிண்டி, ஈக்காட்டுதாங்கல், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன அலுவலகத்தில், பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி, நாளை மறுநாள் துவங்கி 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. உப்பு பிஸ்கெட், இனிப்பு குக்கீஸ், பாம்பே பன், இனிப்பு ரொட்டி, பழ ரஸ்க், பப்ஸ், கேக் வகைகள் தயாரிப்பது, பேக்கரி மூலப் பொருட்கள், உபகரணங்கள், கருவிகள் கொள்முதல், சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்சி வழங்கப்படும்.இதில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 வயதுக்கு மேற்பட்ட ஆர்வமுடைய ஆண், பெண் பங்கேற்கலாம். குறைந்த வாடகையில் விடுதி வசதி உள்ளது. கட்டணம் மற்றும் இதர தகவல் குறித்து, 86681 02600, 70101 43022 என்ற எண்களில், அலுவலக நாட்களில் தொடர்பு கொள்ளலாம் என, அத்துறை அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ