மேலும் செய்திகள்
மத்திய அரசு அலுவலக அணி காவல் ஹேக்கத்தானில் வெற்றி
5 hour(s) ago
போதைக்கு எதிராக மாணவியர் விழிப்புணர்வு
5 hour(s) ago
ஜதியில் ஜொலித்த சஹானா
5 hour(s) ago
நாசாவின் சர்வதேச போட்டியில் ஈஸ்வரி கல்லுாரி சாதனை
5 hour(s) ago
எண்ணுார், எர்ணாவூர், கிரிஜா நகர், மல்லிகை தெருவைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் மார்டின், 35; தனியார் நிறுவன ஊழியர். கடந்த, அக்., 1, 2008ல், வீட்டை பூட்டி உறவினர் வீட்டிற்கு சென்றார்.மறுநாள் வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 11.5 சவரன் தங்க நகைகள் திருடு போனது தெரிந்தது. இது குறித்து, எண்ணுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில், திருட்டில் தொடர்புடைய, பெரவள்ளூர், ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த அன்பழகன், 48, என்பவரை, கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளிவந்த அவர், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஏமாற்றி வந்தார். கடந்த மாதம், திருவொற்றியூர் குற்றவியல் நீதிமன்றம், அவருக்கு 'பிடிவாரன்ட்' பிறப்பித்தது. இதையடுத்து, வழக்கில் தொடர்புடைய அன்பழகனை, எண்ணுார் போலீசார் நேற்று காலை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago