பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை, மந்தைவெளி, ஸ்ரீனிவாசா அவென்யூவில் உள்ள செட்டிநாடு ஹரி ஸ்ரீ வித்யாலயம் பள்ளிக்கு, நேற்று காலை இ - மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது.அபிராமபுரம் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் பள்ளி முழுதும் சோதனை மேற்கொண்டனர். இதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.