பாம்பு கடித்ததாக சிறுவன் அட்மிட்
நீலாங்கரை, கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரை சேரந்தவர் பிரகாஷ், 35. இவரது மகன் சஞ்சு, 4.இச்சிறுவன் நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து, எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில், சிறுவனை அனுமதித்தனர். அங்கு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நீலாங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.