உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநில எறிபந்து போட்டி சென்னை அணிக்கு வெண்கலம்

மாநில எறிபந்து போட்டி சென்னை அணிக்கு வெண்கலம்

சென்னை, ஈரோட்டில் உள்ள சூரியா இன்ஜினியரிங் கல்லுாரியில், 32வது மாநில எறிபந்து போட்டிகள் நடந்தன. அதில், 26 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் ஆண், பெண் பிரிவுகளில் பங்கேற்றன. பெண்கள் பிரிவின் இறுதிப்போட்டியில், கிருஷ்ணகிரி அணி, ஈரோடு அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.மூன்றாம் இடத்துக்கான போட்டியில், சென்னை பெண்கள் அணி, கோவை அணியை எதிர்கொண்டு, 25--23, 25--22 என்ற நேர் செட் கணக்கில் வென்று, வெண்கல பதக்கத்தை பெற்றது. ஆண்களுக்கான போட்டியில் கரூர் மாவட்ட அணி, ஈரோடு அணியை வென்று சாம்பியன் பட்டம் வென்றது. சென்னையுடன் மோதிய கிருஷ்ணகிரி அணி, மூன்றாம் இடம் பிடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி