உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பனை மரத்தில் மோதியது பஸ் டிரைவர் பலி; 6 பேர் காயம்

பனை மரத்தில் மோதியது பஸ் டிரைவர் பலி; 6 பேர் காயம்

சோளிங்கர், ன்னை, தாம்பரம் அருகே உள்ள படப்பையில் இயங்கும் தனியார் நிறுவன பேருந்து தினமும், ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் இருந்து தொழிலாளர்களை பணிக்கு அழைத்துச் செல்லும். நேற்று காலை, 5:30 மணியளவில், 20க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு, சோளிங்கர் அடுத்த சின்னநாகபூடி கிராமம் அருகே சென்றபோது, சாலையோர பனை மரத்தின் மீது பேருந்து மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே ஓட்டுனர் கேசவன் பலியானார். மேலும், ஆறு பெண் தொழிலாளர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். பேருந்து ஓட்டுனர் கேசவன், 30, துாக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக, ஆர்.கே.பேட்டை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ