உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலையில் இடையூறு செய்த த.வெ.க.,வினர் மீது வழக்கு

சாலையில் இடையூறு செய்த த.வெ.க.,வினர் மீது வழக்கு

செம்மஞ்சேரி, தமிழக அரசை கண்டித்து, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், ஓ.எம்.ஆர்., சோழிங்கநல்லுார் சந்திப்பில், நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது.அப்போது, பாதுகாப்புக்கு பெண் போலீசார் நிறுத்தவில்லை எனக்கூறி, சாலை மறியல் போராட்டம் செய்தனர். போலீசார் எடுத்து கூறியும் கலைந்து செல்லவில்லை. இதனால், ஒரு மணி நேரம் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. பின் கலைந்து சென்றனர்.இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், அக்கட்சி நிர்வாகிகளான சரவணன், மேகபிரியன், ரவி, திவ்யஸ்ரீ ஆகியோர் மீது, செம்மஞ்சேரி போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை