உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடற்கரை - எழும்பூர் 4வது ரயில் பாதை 4 மாதங்களில் பணியை முடிக்க இலக்கு

கடற்கரை - எழும்பூர் 4வது ரயில் பாதை 4 மாதங்களில் பணியை முடிக்க இலக்கு

சென்னை, 'சென்னை எழும்பூர் -- கடற்கரை நான்காவது புதிய பாதை பணிகள், அடுத்த நான்கு மாதங்களில் முடிக்கப்படும்' என, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.சென்னை எழும்பூர் -- கடற்கரை இடையே, 280 கோடி ரூபாயில், நான்காவது புதிய பாதை அமைக்க, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.முக்கியமான இணைப்பு ரயில் திட்டம் என்பதால், பணிகளை விரைந்து முடிக்கவும், ரயில்வே வாரியம் உத்தரவிட்டது. நிலம் கையகப்படுத்துவதில் இருந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதால், சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே நான்காவது பாதைக்கான பணிகள், கடந்தாண்டு ஆகஸ்டில் துவக்கப்பட்டன.பூங்கா நகர் மற்றும் கோட்டை ரயில் நிலையங்களில் தேவையற்ற பொருட்களை அகற்றிவிட்டு, கட்டமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.இது குறித்து, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:கடற்கரை - எழும்பூர் இடையே நான்காவது புதிய பாதைக்கான தடுப்புகள் அகற்றப்பட்டு, பாதை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.அதேபோல் கோட்டை, பூங்காநகர் ஆகிய ரயில் நிலையங்களில் ஏற்கனவே இருந்த மேம்பால ரயில் பாதைகள் அகற்றப்பட்டு, கூடுதல் நடைமேடைகள் அமைப்பது, மேற்கூரைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.மேலும், கூவம் ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில், பூமிக்கடியில் கம்பிகள் வாயிலாக அடித்தளம் அமைக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டு உள்ளன.அடுத்தகட்டமாக, ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறும். ஒட்டுமொத்த பணிகளையும், அடுத்த நான்கு மாதங்களில் முடிக்க உள்ளோம். அதன் பின், கடற்கரை - வேளச்சேரிக்கு மீண்டும் மின்சார ரயில்கள் இயக்கப்படும். அதுபோல், எழும்பூர் வழியாக வெளியூருக்கு விரைவு ரயில்களின் சேவையும் அதிகரிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ