உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பள்ளி பேருந்து மோதி கல்லுாரி மாணவர் பலி

பள்ளி பேருந்து மோதி கல்லுாரி மாணவர் பலி

மணப்பாக்கம், நந்தம்பாக்கம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் நீதிபதிபாண்டியன், 19; நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லுாரி ஒன்றில் முதலாம் ஆண்டு மாணவர்.இவர் நேற்று, மணப்பாக்கம், அம்பேத்கர் பிரதான சாலையில் தன் 'யமஹா' பைக்கில், மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி, 'ஹெல்மெட்' அணியாமல் சென்று கொண்டிருந்தார்.அதே திசையில், வேகமாக சென்ற தனியார் பள்ளி பேருந்து, பைக் மீது மோதியதில், நிலை தடுமாறி விழுந்த நீதிபதிபாண்டியனின் தலையில் பேருந்து சக்கரம் ஏறி இறங்கியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனரான, திருவள்ளூர் மாவட்டம், ஆரணியை சேர்ந்த சரவணன், 59, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை