பாண்டி பஜார், தி. நகர் வடக்கு உஸ்மான் சாலையைச் சேர்ந்தவர் கவும் சந்த் போத்ரா, 61. இவர், தி.நகர் ராமசாமி சாலையில், ஒயிட் பயர் டைமண்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். தங்கம் மற்றும் வைர நகைகளை தயாரித்து, கடைகளுக்கு மொத்த விற்பனை செய்து வருகிறார். தங்க, வைர ஆபரணங்களை செய்வதற்காக கோல்கட்டாவில் இருந்து ஸ்ரீனிஜி என்ற நிறுவனத்தின் மேலாளர் பிரீத்தம், 26, என்பவர், கவுதம் சந்த் போத்ராவின் நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகளாக விற்பனை பிரிவை கவனிக்கிறார். இந்நிலையில், கடந்த 22 ம் தேதி, கவுதம் சந்த் போத்ரா, தன் நிறுவனத்தின் கணக்குகளை தணிக்கை செய்ததில், 93 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 155 சவரன் 24 காரட் தங்கம் மற்றும் 91 லட்சம் மதிப்புள்ள 140 காரட் வைரங்கள் என, மொத்தம் 1.84 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து, பிரீத்தம், ஒயிட் பையர் நிறுவனத்தில் பணியாற்றும் பிரதீப், அருண், சதீஷ்குமார், கணேசன், முருகராஜ், தமிழ் மணி, வாசுதேவன் என, எட்டு பேர் சேர்ந்து நகைகளை திருடிவிட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பாண்டி பஜார் காவல் நிலையத்தில், கவுதம் சந்த் போத்ரா புகார் அளித்தார். இதுகுறித்து பாண்டி பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.