காசிமேடு:தமிழகத்தில், கடல் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக, ஆண்டுதோறும் ஏப்., 13 முதல் ஜூன் 14ம் தேதி நள்ளிரவு வரை, 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நடைமுறையில் உள்ளது. இந்த நாட்களில், 28 குதிரை திறனுடைய இன்ஜின் வைத்து 'லாஞ்ச்' எனும் விசைப்படகு பயன்படுத்தி, ஆழ்கடலில் மீன்பிடிக்கக் கூடாது. கரையோரங்களில் சாதாரண பைபர் படகுகள் வைத்து மட்டுமே மீன்படிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.அதன்படி, இந்தாண்டு அமலில் இருந்த மீன்பிடி தடைக்காலம், கடந்த 14ம் தேதி நள்ளிரவு முடிவுக்கு வந்தது. இதையடுத்து, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். அதில், 100க்கும் மேற்பட்ட படகுகள் நேற்று கரை திரும்பின.இதில், சங்கரா, கானகத்தா, வரி பாறை, கிளிஞ்ச, முளியான், கடம்பா உள்ளிட்ட சிறிய மீன்களே அதிகளவில் விற்பனைக்கு வந்தன. பர்லா, கோலா உள்ளிட்ட பெரிய மீன் வகைகள் வரத்து குறைவாகவே இருந்தது. இதனால், விலையில் பெரிய மாற்றமில்லை. கடந்த வாரங்களில் இருந்ததைவிட சற்று குறைந்து காணப்பட்டது.காய்கறி விலை அதிகரித்துள்ளதால், மீன்கள் வாங்க அதிகாலை முதல் காசிமேடில் மீன் பிரியர்கள் குவிந்தனர். ஆனால், பெரும்பாலானோர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.மீன்பிடித் தடைக்காலம் முடிந்து, மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளதால், நிறைய மீன்கள் விற்பனைக்கு வந்திருக்கும் என நினைத்து வந்தோம். குறைந்த அளவு மீன்களே வந்துள்ளன. விலையும் அதிகமாக உள்ளதால், குறைவாக வாங்க முடிந்தது.ராஜா, 38, ராயபுரம்.படகுகள் கடலுக்கு சென்று இரு நாட்களே ஆனதால், மீன்கள் குறைந்த அளவே விற்பனைக்கு வந்துள்ளன. இதனால், மீன்விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. அடுத்த ஞாயிற்றுக்கிழமை மீன் வரத்து அதிகம் இருக்கும். மீன் விலையும் குறையும்.மீனவர்கள்காசிமேடுமீன் விலை நிலவரம்வகை கிலோ (ரூ.)வஞ்சிரம் 1,200 - 1,300வவ்வால் 700 - 1600கொடுவா 700 - 1000சங்கரா 300 - 400கனாகத்த 150 200வரி பாறை 200 - 250கிளிஞ்ச 100முளியான் 100 - 150நண்டு 350 - 400இறால் 300 - 500கடம்பா 250 - 300