உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இறந்த வாடிக்கையாளரின் ரூ.30 லட்சம் அபேஸ்

இறந்த வாடிக்கையாளரின் ரூ.30 லட்சம் அபேஸ்

திரு.வி.க.நகர், பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார்,47. இவர், 'ஜியோஜிட் பைனான்சியல் சர்வீசஸ்' நிறுவனத்தில் மாநில ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்தார்.கல்யாண்குமார் என்பவர், இதே நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.இந்நிறுவனத்தில், 30 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்து வைத்திருந்த, ரமேஷ்குமார் என்ற வாடிக்கையாளர் இறந்துள்ளார்.ரமேஷ்குமார் இறந்ததை நிறுவனத்திற்கு தெரிவிக்காத கல்யாண்குமார், 30 லட்சம் ரூபாயை, அங்கீகரிக்கப்படாத வர்த்தகத்தில், தவறாக பயன்படுத்தி உள்ளார்.இதனால், நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயகுமார் வழக்கு தொடுத்தார்.நீதிமன்ற உத்தரவுப்படி திரு.வி.க.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ