உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அம்மன் கோவில் இடித்து அகற்றம்

அம்மன் கோவில் இடித்து அகற்றம்

மாதவரம், மாதவரம், 26வது வார்டுக்கு உட்பட்ட அ.சி.சி., நகர் பகுதியில், 'ஆவின்' நிறுவனத்திற்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் உள்ளது.இதில் செல்லியம்மன் சிலை வைத்து, பொதுமக்கள் வழிபட்டு வந்தனர். சிறிய அளவில் கோவில் கட்டியுள்ளதை ஆவின் நிர்வாகம் அறிந்தது. அனுமதியின்றி கோவில் கட்டியதாக, மாநகராட்சியிடம் ஆவின் நிர்வாகம் புகார் அளித்தது.இதையடுத்து, ஆவின் நிறுவன துணை பால்வள கமிஷனர் லட்சுமணன் தலைமையிலான அதிகாரிகள், செங்குன்றம் மற்றும் மாதவரம் பால்பண்ணை போலீசார் உதவியுடன், கோவிலின் தகர கூரையையும் அம்மன் சிலையையும் அகற்றினர். அதற்கு பொதுமக்கள், சிலையை அகற்றக்கூடாது என, கடும் வாக்குவாதம் செய்து, மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமரசத்திற்கு பின், அனைவரும் கலைந்த சென்றனர். கைப்பற்றப்பட்ட அம்மன் சிலை, கிராம நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ