| ADDED : ஜூன் 19, 2024 12:17 AM
சென்னை, தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் சங்கத்தின் அறிவுத்தல்படி, அந்ததந்த மாவட்ட வாரியாக, தேர்வு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், கிரேட்டர் சென்னை ஸ்பீடு ஸ்கேட்டிங் சங்கம் சார்பில், போரூர் அடுத்த கெருகம்பாக்கத்தில் ஜூலை, 27, 28ம் தேதிகளில், மாவட்ட அளவிலான தேர்வு போட்டி துவங்குகிறது. இதில், நான்கு பிரிவுகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன.ஒவ்வொரு பிரிவினருக்கும், பிகினர், ஸ்குவாட், புரொபஷனல் இன்லைன், பேன்சி இன்லைன் ஆகிய வகைகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.இப்போட்டியில், பங்கேற்க ஆர்வமுள்ள சென்னை மாவட்ட வீரர் - வீராங்கனையர், www.tnssa.inஎன்ற இணைத்தளத்தில், நாளை முதல் பதிவு செய்யலாம். பதிவு செய்யும் வீரர் - வீராங்கனையர் மட்டுமே, தேர்வு போட்டியில் பங்கேற்க முடியும்.விபரங்களுக்கு, 79046 15668, 96006 35806 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.