மேலும் செய்திகள்
சாலை மைய தடுப்பில் பைக் மோதி மாணவர் பலி
05-Oct-2025
வீல் சேர் குண்டு எறிதல்: சென்னைக்கு வெள்ளி
05-Oct-2025
மாநில தடகளம்: சென்னை வீரர் அசத்தல்
05-Oct-2025
பல்லாவரம், பழைய பல்லாவரம், பல்லவா கார்டன் 8வது அவென்யூவைச் சேர்ந்தவர் குமரன், 44; மென்பொறியாளர். கடந்த 30ம் தேதி, துக்க நிகழ்ச்சிக்காக குடும்பத்தினருடன் கும்பகோணத்திற்கு சென்றார். மே 3ம் தேதி, வீட்டு வேலை செய்யும் ஊழியர் வந்தபோது, வீட்டு கதவு திறந்திருந்தது.இது குறித்து குமரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 60 சவரன் நகை, 50,000 ரூபாய் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது. இந்த திருட்டில், வட மாநில நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து, பல்லாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025