உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முன்னாள் ராணுவ வீரர் ரயிலில் அடிபட்டு பலி

முன்னாள் ராணுவ வீரர் ரயிலில் அடிபட்டு பலி

திருவொற்றியூர், வேலுார் மாவட்டம், ஆம்பூர் தாலுகா, விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 46; ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர். திருவொற்றியூரில் தங்கி, சாத்தாங்காடு ஸ்டீல் யார்டில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார்.ஒடிசா மாநிலத்தில் இருந்து, நேற்று அதிகாலை, சாத்தாங்காடு ஸ்டீல் யார்டுக்கு சரக்கு ரயில் வந்துள்ளது. அதற்காக, ரயில் கேட்டை ரமேஷ் திறந்துள்ளார். அப்போது, கால் தடுக்கி தண்டவாளத்தில் விழுந்த அவர் மீது, சரக்கு ரயில் சக்கரங்கள் ஏறி இறங்கியதால், உடல் இரு துண்டாகி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இறந்த முன்னாள் ராணுவ வீரரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ