தாம்பரம், சென்னையின் புறநகரான பல்லாவரம், பம்மல், பல்லாவரம் - திருநீர்மலை சாலை, குரோம்பேட்டை பேருந்து நிலையம், எம்.ஐ.டி., மேம்பாலத்தின் கீழ் பகுதி, கிஷ்கிந்தா சாலை, செம்பாக்கம் திருமலை நகர் பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை நடக்கிறது.தாம்பரம் மார்க்கெட், சானடோரியம் மேம்பாலத்தின் கீழ் பகுதி, காமராஜபுரம் பேருந்து நிறுத்தம், கடப்பேரி ஜி.எஸ்.டி., சாலை, கிழக்கு தாம்பரம், மண்ணிவாக்கம் உள்ளிட்ட இடங்களில், மதுக்கூடங்களில் அதிகாலை முதல் சரக்கு விற்பனை நடக்கிறது. அதிகாரிகள் மற்றும் போலீசாரின் துணையோடு, சரக்கு விற்பனை ஜோராக நடக்கிறது.இது குறித்து பல முறை புகார் தெரிவித்தும்,மதுவிலக்கு போலீசார், மதுக்கூட உரிமையாளர்களுடன் கைகோர்த்து, அதிகாலை சரக்கு விற்பனைக்கு பச்சைக்கொடி காட்டி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடி நடவடிக்கையை போல், புறநகரில் கொடிகட்டி பறக்கும் அதிகாலை சரக்கு விற்பனையையும், இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் என, அரசுக்கு பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.