உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெரம்பூர் வழி பெங்களூரு - தானாபூர் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு

பெரம்பூர் வழி பெங்களூரு - தானாபூர் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு

சென்னை, ஆக. 27-கர்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து, சென்னை பெரம்பூர் வழியாக பீஹார் மாநிலம், தானாபூர் செல்லும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: 1 தானாபூர் - எஸ்.எம்.வி.டி., பெங்களூருக்கு வாரந்தோறும் புதன்கிழமைகளில் செல்லும் சிறப்பு ரயில், வரும் 28ம் தேதி முதல் செப்., 4ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படுகிறது2 எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - தானாபூருக்கு வாரந்தோறும் புதன்கிழமைகளில் செல்லும் சிறப்பு ரயில், வரும் 30ம் தேதி முதல் செப்., 6ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படுகிறது 3 தானாபூர் - எஸ்.எம்.வி.டி., பெங்களூருக்கு செவ்வாய், புதன்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும் 25 முதல் செப்., 2ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது4 எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - தானாபூருக்கு செவ்வாய்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும் 27ம் தேதி முதல் செப்., 4ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும்5 தானாபூர் - எஸ்.எம்.வி.டி., பெங்களூருக்கு வியாழன்களில் செல்லும் சிறப்பு ரயில், வரும் 29ம் தேதி முதல் செப்., 5ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும் 6 எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - தானாபூருக்கு சனிக்கிழமைகளில் செல்லும் சிறப்பு ரயில், வரும் 31ம் தேதி முதல் செப்., 7ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும் 7 தானாபூர் - எஸ்.எம்.வி.டி., பெங்களூருக்கு வெள்ளிக்கிழமைகளில் செல்லும் 'ஏசி' சிறப்பு ரயில், வரும் 30ம் தேதி முதல் செப்., 6ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும் 8 எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - தானாபூருக்கு ஞாயிறுகளில் செல்லும் 'ஏசி' சிறப்பு ரயில், வரும் செப்., 1ம் தேதி முதல் 8ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ