உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அம்மன் கோவிலில் தீ மிதி விழா

அம்மன் கோவிலில் தீ மிதி விழா

வரதராஜபுரம், குன்றத்துார் அடுத்த வரதராஜபுரம், டிரஸ்ட் பரத்வாஜ் நகரில் எல்லையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆடி திருவிழாவை முன்னிட்டு, நாளை காலை 8:00 மணிக்கு பூ கரகம் எடுத்தல், மதியம் 12:00 மணிக்கு தாய் வீட்டு சீர்செய்தல் நிகழ்ச்சி நடக்கிறது.மாலை 6:00 மணிக்கு நடக்கும் தீ மிதி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்த உள்ளனர். ஆக., 7ம் தேதி காலை 8:00 மணிக்கு, அம்மனுக்கு, பக்தர்கள் கைகளால் வளையல் காணிக்கை அளிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, வரதராஜபுரம் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை