மேலும் செய்திகள்
சிசிடிவிக்களை சேதப்படுத்திய லாரியை தேடும் மாநகராட்சி
20 minutes ago
இன்று கச்சேரி
21 minutes ago
பொங்கலுக்காக ரேஷனில் சிறப்பு தொகுப்பு விற்பனை
22 minutes ago
காதலின் இன்பத்தை பரிமாறிய மீனாட்சி
22 minutes ago
சென்னை, மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் 60 வயதுக்கு மேற்பட்ட சென்னை வாழ் முதியோருக்கு, இலவச பஸ் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி, வரும் ஜூலை முதல் டிசம்பர் வரை பயன்படுத்தக்கூடிய ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம், ஆறு மாதங்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்குதல், அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிக்கு அட்டை வழங்குதல் ஆகியவை வரும் 21 முதல் ஜூலை 31ம் தேதி வரை, காலை 8:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை வழங்கப்படும்.அடையாறு, ஆவடி, திருவொற்றியூர், கோயம்பேடு உட்பட 40 நிறுத்தங்களில் டோக்கன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அந்தந்த பணிமனை அலுவலகத்திலும் பெறலாம்.
20 minutes ago
21 minutes ago
22 minutes ago
22 minutes ago