உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிரிவலம் செல்ல கட்டணமில்லா சிற்றுந்து

கிரிவலம் செல்ல கட்டணமில்லா சிற்றுந்து

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையின் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து, கிரிவலம் சென்று வர, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தால், கட்டணமில்லா சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன.வரும் 22, 23ம் தேதிகளில், திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, ஒன்பது இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  வேலுார் சாலை, அண்ணா ஆர்ச் - தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து, போளூர், வேலுார், ஆரணி, ஆற்காடு, செய்யாறு மார்க்கமாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன அவலுார்பேட்டை சாலை, - எஸ்.ஆர்.ஜி.டி.எஸ்., பள்ளி எதிரில் - சேத்துப்பட்டு, வந்தவாசி, காஞ்சிபுரம் திண்டிவனம் சாலை, ஆறுமுகனார் நகர் - கிளாம்பாக்கம், தாம்பரம், அடையாறு, மாதவரம் திண்டிவனம் சாலை அன்பாலயா நகர் - செஞ்ச, திண்டிவனம், புதுச்சேரி வேட்டவலம் சாலை, சர்வேயர் நகர் - வேட்டவலம், விழுப்புரம் திருக்கோவிலுார் சாலை, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில், அருணை மருத்துவக் கல்லுாரி அருகில் மற்றும் வெற்றி விநாயகர் நகர் - திருக்கோவிலுார், பண்ருட்டி, கடலுார், சிதம்பரம், கும்பகோணம், திட்டக்குடி, விருத்தாசலம், நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி  மணலுார்பேட்டை ரோடு, செந்தமிழ் நகர் - மணலுார்பேட்டை, கள்ளக்குறிச்சி, தானிப்பாடி, சாத்தனுார் அணை செங்கம் ரோடு, அத்தியந்தல் மற்றும் சுபிக் ஷா கார்டன் - செங்கம், தருமபுரி, திருப்பத்துார், சேலம், பெங்களூர், ஓசூர், ஈரோடு, கோவை காஞ்சிபுரம் சாலை, டான்பாஸ்கோ பள்ளி - காஞ்சி, மேல்சோழங்குப்பம் ஆகிய மார்க்கத்தில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த ஒன்பது பேருந்து நிலையங்களில் இருந்து, 25 கட்டணமில்லா சிற்றுந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ