மேலும் செய்திகள்
செய்திகள் சில வரிகளில்
12-Oct-2025 | 1
செம்மஞ்சேரி, சோழிங்கநல்லுார் மண்டலம் 200வது வார்டு, செம்மஞ்சேரி, முழு நேர ஆரம்ப சுகாதார நிலையம், 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுகிறது. இங்கு, சாதாரண நோய் பாதிப்பு, கர்ப்பிணியருக்கான சிகிச்சை, ரத்த பரிசோதனை, டயாலசீஸ் உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. முழு நேரமாக செயல்படுவதால், ஏழை, நடுத்தர மக்கள் மாலை, இரவு வேளையில் சிகிச்சைக்கு செல்கின்றனர். ஆனால், 24 மணி நேரம் செயல்படும் முழு நேர மருத்துவமனையில், ஒரு டாக்டர் தான் உள்ளார்.பொதுவாக, காலை 8:00 முதல் மாலை 3:00 மணிக்குள் சென்றால் டாக்டரை சந்திக்க முடியும். அதுவும், கால்கடுக்க காத்திருக்க வேண்டிய நிலைமை உள்ளது. இதர வேளைகளில் செவிலியர்களே நோய் பாதிப்பை கேட்டு மருந்து மாத்திரை வழங்குகின்றனர். ஊசி போடவோ அல்லது மேல் சிகிச்சை தேவைப்பட்டால், இதர மருத்துவமனைக்கு செல்ல வலியுறுத்துகின்றனர்.இதர மருத்துவமனைகள் துாரமாக உள்ளதால், அருகில் உள்ள தனியார் மருத்துவமனை செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அரசின் அலட்சியத்தால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, கூடுதல் டாக்டர்கள் நியமிக்க, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ''இரண்டு ஆண்டுகளாக ஒரு டாக்டருடன் தான் மருத்துவமனை செயல்படுகிறது. உயர் அதிகாரிகளிடம் கூறி உள்ளோம். விரைவில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்கப்படுவர் என நம்புகிறோம்,'' என்றனர்.
12-Oct-2025 | 1