மேலும் செய்திகள்
ராணுவ விஞ்ஞானி டில்லி பாபுவுடன் ஒரு நேர்காணல்
28-Feb-2025
சென்னை, இ.சி.ஆரில், திருவான்மியூர் முதல் அக்கரை வரை, சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடக்கிறது.மேலும், இ.சி.ஆரில் வடியும் மழைநீர், பகிங்ஹாம் கால்வாய் செல்லும் வகையில், சாலையின் குறுக்கே மூடு கால்வாயும் அமைக்கப்படுகிறது.இதற்காக, கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள், அங்கு வைக்கப்பட்டுள்ளன. இதை, இரவு நேரத்தில், சில இளைஞர்கள் திருடி செல்கின்றனர்.அதே போல், மூடு கால்வாய் பணி பாதியில் இருக்கும் போதே, அதில் உள்ள கம்பியை ஆஷாபிளேடால் அறுத்து எடுக்கின்றனர்.மேலும், பள்ளத்தில் பதித்துள்ள தொலைத்தொடர்பு கேபிள்கள், சிறிய குழாய்களை அறுத்து திருடிச் செல்கின்றனர்.இந்த திருட்டை, சாலை பரபரப்பாக இருக்கும், இரவு 7:00 முதல் 10:00 மணிக்குள் செய்கின்றனர்.பொதுமக்கள் கேட்டால், பணி செய்யும் ஊழியர்கள் என, பொய் கூறுகின்றனர். பாதி பணியில் உள்ள கம்பியை அறுத்து எடுப்பதால், கால்வாயின் உறுதித்தன்மை பாதிக்க வாய்ப்பு உள்ளது.திருட்டை தடுக்க, கட்டுமான நிறுவனமும், ரோந்து போலீசாரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28-Feb-2025