உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தீயணைப்பு நிலையம் அருகே மலை போல் குப்பை குவிப்பு

தீயணைப்பு நிலையம் அருகே மலை போல் குப்பை குவிப்பு

பூந்தமல்லி, பூந்தமல்லி புதிய தீயணைப்பு நிலைய கட்டடம் அருகே, மலைபோல் குவிந்துள்ள குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.சென்னை, பூந்தமல்லி குமணன்சாவடியில், தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் சிறிய கட்டடத்தில், இட நெருக்கடியுடன் இயங்கி வருகிறது.இதையடுத்து, இட வசதியுடன் பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் ஊராட்சி எல்லையில், 1.19 கோடி ரூபாய் மதிப்பில், புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதன் திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில், புதிய கட்டடம் அருகே மலை போல் குப்பை குவிக்கப்பட்டு உள்ளன.இதனால், அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்த குப்பை மற்றும் கழிவுகளை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ