உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வழிநெடுக குப்பை கழிவுகள் வரவேற்கிறது துறைமுகம் கேட்

வழிநெடுக குப்பை கழிவுகள் வரவேற்கிறது துறைமுகம் கேட்

காசிமேடு:காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை, 97.75 கோடி ரூபாய் மத்திய அரசு நிதியில் மேம்படுத்த, அரசு நடவடிக்கை எடுத்தது. அதில், காசிமேடு மீன்பிடி துறைமுக பழைய காவல் நிலையம் துவங்கி துறைமுகம் ஜீரோ கேட் வரை, 1.86 கி.மீ., துாரம் வரை சாலை அமைக்கும் பணி நடக்கிறது.அந்த சாலை அமைய உள்ள துறைமுகம் செல்லும் 'ஜீரோ கேட்' சாலையில் டன் கணக்கில் குப்பை குவிந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.தனியார் மருத்துவமனையின் மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் குப்பை, டயர்கள் என அப்பகுதியில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால், வழிநெடுக கடும் துர்நாற்றம் வீசுகிறது. சாலை பராமரிப்பில் அதிகாரிகளின் அலட்சியம், சிங்கார சென்னையின் பெயரை அசிங்கப்படுத்துவதாக உள்ளது என, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை