உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 2 கட்டங்களாக துார்வாரும் பணி நீர்வளத்துறைக்கு அரசு உத்தரவு

2 கட்டங்களாக துார்வாரும் பணி நீர்வளத்துறைக்கு அரசு உத்தரவு

சென்னை, வடகிழக்கு பருவ மழையின் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. நீர் வழித்தடங்களில், முறையாக துார்வாரும் பணிகளை மேற்கொள்ளாததே மழை வெள்ள பாதிப்பிற்கு காரணம். துார்வாரும் பணிக்கு போதிய நிதியை அரசு வழங்கவில்லை என்று நீர்வளத்துறையினர் காரணம் கூறி வருகின்றனர். எனவே, நடப்பாண்டு அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய், அரும்பாக்கம் கால்வாய், கொசஸ்தலையாறு, ஆரணியாறு உள்ளிட்டவற்றில் துார்வாரும் பணிக்கு 20 கோடி ரூபாயை அரசு வழங்கியுள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்பாகவே, நிதி ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. முன்கூட்டியே பணிகளை துவங்க நீர்வளத்துறையினர் ஆயத்தமாகினர். ஆனால், வடகிழக்கு பருவமழை அக்டோபரில் துவங்கும் என்பதால், துார்வாரிய பிறகு மீண்டும் கழிவுகளால் அடைப்புகள் ஏற்படும் வாய்ப்பு இருந்தது. இதனால், பணிகளை துவக்க வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டது. தற்போது, துார்வாரும் பணிகளை இரண்டு கட்டங்களாக மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, முதற்கட்ட பணிகளை ஜூலையில் துவங்கி செப்டம்பரில் முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த காலகட்டத்தில் நீர்வழித்தடங்களில் உள்ள குப்பைகள், கழிவுகள், ஆகாயதாமரை உள்ளிட்ட களை செடிகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை பருவமழை காலம் முடியும் வரை, தடையில்லாத நீரோட்டத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ