மேலும் செய்திகள்
செய்திகள் சில வரிகளில்
12-Oct-2025 | 1
பல்லாவரம், பல்லாவரம் அருகே ஓடிக்கொண்டிருந்த இருசக்கர வாகனம், திடீரென தீப்பிடித்து எரிந்தது.பல்லாவரம் அருகே நேற்று மதியம், ஜி.எஸ்.டி., சாலை வழியாக சென்ற பைக் திடீரென தீப்பிடித்து எரியத் துவங்கியது. வாகனத்தை ஓட்டி வந்த ராஜேஷ் என்பவர், வாகனத்தை சாலையின் ஓரம் நிறுத்தி இறங்கினார். சிறிது நேரத்தில், வாகனம் மளமளவென தீ பற்றி எரிந்தது. தாம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து, தீயை அணைத்தனர். இதனால், ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல்லாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
12-Oct-2025 | 1