உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.1.50 லட்சம் குட்கா பறிமுதல்

ரூ.1.50 லட்சம் குட்கா பறிமுதல்

ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள பாரதி நகரில் உள்ள ஒரு வீட்டில், நேற்று முன்தினம் இரவு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், மூட்டை மூட்டையாக ஹான்ஸ், விமல், ஸ்வாகத் உள்ளிட்ட 50 கிலோ குட்கா பொருட்கள் சிக்கின. இதன் மதிப்பு 1.50 லட்சம் ரூபாய்.இதை தொடர்ந்து, வீட்டின் உரிமையாளர் குமார், 45, என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்ததில், குட்கா பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து, ஸ்ரீபெரும்புதுாரை சுற்றியுள்ள சிறு கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை