எம்.ஜி.எம்., கருத்தரித்தல் மையம் துவக்கம்
சென்னை, எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனையில், அதிநவீன மருத்துவ கட்டமைப்புகளுடன் கூடிய செயற்கை கருத்தரித்தல் மையம், 'வரம்' என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ளது.துவக்க விழாவில், மருத்துவமனை இயக்குனர் உர்ஜிதா ராஜகோபாலன், வரம் சிகிச்சை மைய இயக்குனர் தாட்சாயிணி, மகப்பேறு சிறப்பு டாக்டர்கள் வனிதா, லட்சுமி, ஜெயஸ்ரீ கஜராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.உர்ஜிதா ராஜகோபாலன் கூறுகையில், ''குழந்தையின்மை பாதிப்புக்குள்ளான தம்பதிக்கு நிலவும் உடல் ரீதியான, உளவியல் ரீதியான சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில், செயற்கை கருத்தரிப்பு மையம் துவக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.