உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரங்கநாதர் கோவில் பங்குனி விழா துவக்கம்

ரங்கநாதர் கோவில் பங்குனி விழா துவக்கம்

திருநீர்மலை, திருநீர்மலையில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. திருமங்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற இக்கோவிலில், நான்கு கோலங்களில் பெருமாள் காட்சி அளிக்கிறார்.சிறப்புமிக்க இக்கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி விழா நடந்து வருகிறது.இந்தாண்டு மார்ச், 27ம் தேதி முதல் ஏப்., 5ம் தேதி வரை, 10 நாட்கள் பங்குனி விழா நடக்கிறது. முதல் நாளான நேற்று, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.தொடர்ந்து, சுவாமி வீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் ஐந்தாம் நாளான வரும் 31ம் தேதி கருட சேவை, ஏழாம் நாள் தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை