உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விளையாட்டு மைதானமா... மதுக்கூட குப்பை கிடங்கா?

விளையாட்டு மைதானமா... மதுக்கூட குப்பை கிடங்கா?

திருவொற்றியூர்:திருவொற்றியூர் அடுத்த விம்கோ நகர் மெட்ரோ ரயில் பணிமனை அருகே மைதானம் உள்ளது. இதை அப்பகுதி இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.விளையாட்டு திடல் எதிரே உள்ள 'டாஸ்மாக்' மதுபானக் கடைக்கு வரும் மதுபிரியர்கள், மதுக்கூடத்தில் அமர்ந்து மது அருந்தாமல், மைதான பகுதியில் மது அருந்துகின்றனர்.இதனால், அந்த வழியே நடந்து செல்லவே பெண்கள், குழந்தைகள் அச்சப்படுகின்றனர். இது ஒருபுறம் இருக்க, மது குடித்து விட்டு, பாட்டில்கள், காலி பிளாஸ்டிக் வாட்டர் பாக்கெட், டம்ளர்களை விளையாட்டு திடல் வளாகத்தினுள் வீசி செல்கின்றனர். விளைவு மைதானம் மதுக்கூட குப்பை கிடங்காக காட்சியளிக்கிறது. மேலும், இவற்றில் தேங்கும் தேங்கும் மழைநீரால், 'டெங்கு' காய்ச்சல் பரப்பும், 'ஏடிஸ்' கொசுக்கள் உற்பத்தியாகும் மையமாக உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை