உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஓட ஓட விரட்டி ரவுடி கொலை விருகையில் பயங்கரம் 

ஓட ஓட விரட்டி ரவுடி கொலை விருகையில் பயங்கரம் 

கோயம்பேடு, சென்னை, விருகம்பாக்கம், டாய்ஷா அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆதாம், 35. இவர் மீது, கொலை முயற்சி, திருட்டு, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.ரவுடியாக வலம் வந்த இவர், பைக் திருடுவதிலும் கைத்தேர்ந்தவர்.தொழில் போட்டி காரணமாக, ஆதாமுக்கும், அங்குள்ள சில ரவுடி கும்பலுக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.நேற்று மாலை வீட்டருகே நின்றிருந்த ஆதாமை பார்க்க சிலர் வந்தனர். அப்போது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால், ஆதாமை ஓட ஓட விரட்டி வெட்டினர்.இதில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இது குறித்து, கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆதாம் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.தப்பி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ