| ADDED : ஜூலை 08, 2024 01:57 AM
பெருங்குடி மண்டலம் மடிப்பாக்கம், பெரியார் நகரின் பிரதான சாலை, கோவிந்தசாமி நகர் உள்ளிட்ட பல தெருக்களை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது.பெரியார் நகர் பிரதான சாலை வழியாக மடிப்பாக்கம் பேருந்து நிலையம், குபேரன் நகர், சதாசிவம் நகர், ராம் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டும்.பாதாள சாக்கடை திட்டத்திற்காக, பெரியார் நகர் பிரதான சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடக்கின்றன. இதனால், மக்கள் நடந்து செல்லக்கூட வழியின்றி மூடப்பட்டுள்ளது.இதை சுற்றியுள்ள வழித்தடத்திலும் பாதாள சாக்கடை இணைப்பிற்காக, ஆங்காங்கே பள்ளம் தோண்டி, பணிகள் நடப்பதால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.அப்பகுதி மக்கள் கூறியதாவது:நகரின் பிரதான சாலையில் திட்டப் பணிகள் நடக்கும்போது, மாற்றுப்பாதையை மக்களுக்கு தெரிவிப்பது, அந்த பாதைகளை போக்குவரத்திற்கு ஏற்ப சீரமைப்பது, சம்பந்தப் பட்ட குடிநீர் வாரியம் மற்றும் போலீசாரின் கடமை.ஆனால் அவர்கள், பணிகள் நடக்கும்போது எட்டிக்கூட பார்ப்பதில்லை. பணி முடித்த இடத்தில் மோசமாக உள்ள சாலைகளை பல முறை கூறியும், சீரமைக்காமல் அலட்சியமாக உள்ளனர்.தொடர்ந்து மழை பெய்தால், நாங்கள் வீட்டிற்குள்ளே முடங்கும் நிலை ஏற்படும். பருவமழைக்கு முன், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.- - நமது நிருபர் - -