உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெட்ரோ பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜெயவர்தன் உறுதி

மெட்ரோ பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜெயவர்தன் உறுதி

சென்னை, தென் சென்னை லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயவர்தன், தி.நகர் பகுதிகளில் அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினருடன் வீடு, வீடாக நடந்து சென்று, பொதுமக்களிடம் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்கள் அவருக்கு மலர் துாவியும், மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். அ.தி.மு.க., வேட்பாளர் மருத்துவர் ஜெயவர்தன் கூறியதாவது:போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, தென்சென்னை எம்.பி.,யாக இருந்தபோது, சென்னையில் மெட்ரோ ரயில்களை அமைக்க வேண்டும் என, லோக்சபாவில் வலியுறுத்தினேன். அதன் காரணமாக, தற்போது மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.இதனால், சைதாப்பேட்டை, அசோக் நகர் போன்ற பல்வேறு பகுதிகள் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைக்கப்பட்டு உள்ளது.சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிக்கு, மத்திய அரசு 4,500 கோடி ரூபாய் விடுவிக்காத நிலையில், ஒரு முறைகூட, தி.மு.க., - எம்.பி., தமிழச்சி, லோக்சபாவில் இதுகுறித்து வலியுறுத்தவில்லை. மத்திய நகர்புற அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியை சந்தித்து பேசவில்லை.தமிழச்சி முயற்சி எடுத்திருந்தால், மெட்ரோ ரயில் நிலைய இரண்டாம் கட்ட பணிகள், 70 சதவீதம் முடிந்திருக்கும். ஆனால் தற்போது, 30 சதவீத பணிகள் மட்டும் முடிக்கப்பட்டுள்ளன.ரயில்வே துறையில், ரயில் நிலையத்தை கொண்டு வருவதே மிகவும் கடினமான வேலை. இந்நிலையில், மெட்ரோ ரயில் நிலைய ஸ்டேஷனை மூடும் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் எம்.பி.,யாக வந்தால், தென்சென்னையில் நீக்கப்பட்ட ஐந்து மெட்ரோ ரயில் நிலைய பணிகளை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பேன்.தற்போது நடந்து வரும் மெட்ரோ ரயில் நிலைய பணியால், சோழிங்கநல்லுார் தொகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன்.என் முயற்சியால், கே.கே.நகர், இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரியை, மிகப்பெரிய மருத்துவ கல்லுாரியாக மாற்றப்பட்டது. அதன் காரணமாக 209 கோடி ரூபாய் நிதியில் 410 படுக்கைகள் உடைய உள் நோயாளிகள் பிரிவு, நிர்வாக பிரிவு, மாணவர்களுக்கான விடுதிகள் கட்டப்பட்டன. மத்திய அரசிடம் இருந்து கல்வி மற்றும் மருத்துவத்திற்காக, 1 ரூபாய் நிதி கூட, கடந்த ஐந்து ஆண்டுகளில் பெற்று தர முடியாத எம்.பி.,யாக தமிழச்சி இருந்துள்ளார்.கடந்த 2021ல் இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரியின் 32 ஆசிரியர்கள், வேறு மாநிலத்திற்கு இடமாற்றம் சொய்யப்பட்டு, 27 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டனர். அதன் காரணமாக ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால், கல்வி பாதிக்கப்படுவதாக மாணவர்கள் போராடினர். இது குறித்தும் தமிழச்சி, லோக்சபாவில் எதுவும் பேசவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை