உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கே.எம்.சி., வீரர்கள் அசத்தல் சதம் தியாகராயா அணியை வீழ்த்தியது

கே.எம்.சி., வீரர்கள் அசத்தல் சதம் தியாகராயா அணியை வீழ்த்தியது

சென்னை,டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டிகள், சென்னையின் பல்வேறு மைதானங்களில் நடக்கின்றன.இதில், நான்காவது 'ஏ' டிவிஷன் போட்டியில், கே.எம்.சி., எனும் கிருஷ்ணராஜ் மெமோரியல் கிளப் அணி, முதலில் பேட் செய்து, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு, 302 ரன்கள் குவித்தது.கே.எம்.சி., வீரர்கள் ரோஹித், 108 பந்துகளில் 3 சிக்சர், 12 பவுண்டரிகளுடன் 116 ரன்களும், அஜித்குமார், 102 பந்துகளில் 2 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 102 ரன்களும் குவித்தனர்.கடினமான இலக்குடன் அடுத்து பேட் செய்த தியாகராய ஆர்.சி., அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதனால், 52 ரன்கள் வித்தியாசத்தில் கே.எம்.சி., அணி வெற்றி பெற்றது.மற்றொரு போட்டியில், எழும்பூர் கிளப் மற்றும் சர் ஆஷ்லி பிக்ஸ் நிறுவன அணி மோதின. இதில் முதலில் பேட் செய்த, சர் ஆஷ்லி பிக்ஸ் 49.3 ஓவர்களில் 175 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.எழும்பூர் அணி பந்து வீச்சாளர் சித்தார்த் ரவி, ஐந்து விக்கெட் சாய்த்தார். அடுத்து களமிறங்கிய, எழும்பூர் கிளப் அணி, 35.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ